Sunday, December 21, 2008

சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி -திரை விமர்சனம்

அண்ணே.... இந்த ரெண்டு படத்துக்கும் சத்தியமா போய்டாதீங்க...... 

மீண்டும் விரல் ஆட்டி காளையை விட மோசமான படத்தை தந்து இருக்கிறார் சிம்பு..... தான் கறுப்பாக இருப்பதினால் மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கும் கருணாஸ்.....

ரெண்டுமே செம மொக்க.. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கொலை செய்கின்றனர்......

[தயவு செஞ்சி இந்த ரெண்டு படத்துக்கும் போய்டாதீங்க..... ஒரு ரூபா காசு கூட நான் உழைத்தே சம்பாதிக்கிறேன்..... நீங்களும் அப்படியே என்றே கொள்கிறேன்....அதனால்தான் சொல்றேன்.....]

Leia Mais…

Thursday, December 18, 2008

பார்ப்பனர்கள் ஆரியர்களா?? இல்லை யூதர்களா???

எல்லோருக்கும் வணக்கமுங்க....

தொடர்புடைய பதிவு..... "யார் திராவிட சிசு ?"

இந்த ஆரிய, திராவிட, மக்கள் மீதான, கலாசாரம் மீதான ஒரு பெருத்த சந்தேகமுண்டு.... அதைத்தான் இப்போது கேட்க போகிறேன்....

பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா.... (இரு பிரிவினரும் ஜெர்மன் அல்லது மேற்கு ஐரோப்பியகாரங்கதானே)

நரிமன் பாயின்ட் தாக்கப்பட்ட போது, அவங்களுக்கு அவ்ளோ கோபம் ஏன் வருது??

ஏனென்றால் ஒரு முறை ஹிட்லரின் எனது போராட்டம் படித்தபோது, அவர் யூதர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும், இங்கே பார்ப்பனர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும் கூடிய மட்டும் ஒன்றே.... (சமுதாயத்தில் நஞ்சை கலப்பது, மீடியாக்களில் முகமுடி பிரச்சாரம் இன்னும் பல)உலகம் முழுதும் யூதர்கள் மீதான வெறுப்புணர்ச்சிக்கான காரணங்களும் இதுவே....

அதே நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் கிட்டத்தட்ட பல நாட்கள் ஹிட்லருடன் தங்கி இருந்தும், படைகளை திரட்டியதும் (ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒரே அணியில் இருந்தன) ஆரிய பாசமா.... (இது உண்மை தகவலா என்றும் தெரியவில்லை....)


நாம். தமிழர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தோம்.... இது நமது பிறப்பிடமா... லெமூரியா கண்டது ஆட்களா.... இல்லை சிந்து சமவெளி மக்களா... அல்லது ஆப்ரிக்கா மக்களா...???

இந்த பூணுல் காரங்க, நம்ம பிறப்பிட தகவல்களை அழிச்சிட்டாங்களா....?? இந்த பூணுல் அவங்கலோடதா.... அங்கே இருந்து வரும் போதே போட்டுகிட்டு இருந்தாங்களா??? பூணுலை, முப்புரி நூல் என்று தமிழில் சொல்றாங்களே அது எது??? தசாவதார படத்திலையும் சோழ மன்னன் முதல் படகை செலுத்தும் மக்கள் வரை இந்த நூலை அணிந்து இருந்தாங்களே....???

நம் தமிழர்களின் சங்க காலத்து மதம் எது??? கடவுள் எது??? எங்க குலதெய்வங்க எல்லாம் சுடலைமாடன் சுவாமி எல்லாம் எம்மதம்??? சைவமா?? சைவம் தமிழ் மதமா??தமிழ் கடவுள் முருகனா??

கொஞ்சம் விளக்குங்களேன்.. பின்னூட்டமாக எழுதினாலும் சரி.... தனி பதிவாக போட்டாலும் சரி.... ஏற்கனவே எழுதி இருந்தால் அந்த பதிவுகளின் லிங்க்குகளை தெரிவித்தாலும் சரி.... இல்லை இதை விளக்கும் வேறு பதிவர்களின் லிங்க்குகள் கொடுத்தாலும் சரி...


தனது சொந்த வரலாறு கூட தெரியாத
பதிவன்/வாசகன்......

Leia Mais…

Sunday, October 26, 2008

தமிழர்களுக்கும் ஈழ தமிழர்களுக்கும் ஒரு பகிரங்க கடிதம்

என் அன்பு ஈழ தமிழர்களே(தமிழகத்திலும், ஈழத்திலும் மற்றும் உலகெங்கிலும்),

ஈழத்தில் அமைதி திரும்பிட, அம்மக்களின் வாழ்வு செழித்திட விரும்பும் ஒரு தென் தமிழக தமிழன்.

சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் தாய்நாடு இந்தியா. சுதந்திரத்திற்கு பின் வல்லபாய் பட்டேல் பல சிற்றரசுகளை ஒருகிணைத்து இந்தியா எனும் தேசம் மலர்ந்தது. எம்மக்கள் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவை நேசிக்கிறோம். அறுபது வருடங்கள் ஆகியும் அரசியல்வாதிகள் தவிர்த்து எங்கள் நாட்டில் பலர் வளர்ச்சி அடையாமல் வளரும் நாடாகவே இருக்கிறோம். எங்களால் உள்நாட்டில் இருக்கும் நதிநீர் முதல் உள்ளும் வெளியும் இருக்கும் தீவிரவாத அச்சறுத்தல் மற்றும் அண்டை நாடுகளுடனான பிரச்சனை கூட தீர்த்து கொள்ள முடியாது. எம்மீனவர்களை சுட்டு கொள்ளும் இலங்கை கடற்படையினரை கூட நாங்கள் கேள்வி கேட்பதில்லை.

இலங்கையின் இப்போதைய அரசு, உலக நாடுகளால் ஒத்துகொள்ளபடும் ஒரு அரசு. தேர்தல் மூலம் அரசாங்கத்திற்கு வந்த ஒரு அரசு. விடுதலை புலிகள் உலக நாடுகளால் ஒரு தீவிரவாத கூட்டம் எனப்படுகிறது. விடுதலை புலிகளை ஈழ மக்களின் ரட்சகனாக நினைக்கலாம். ஆனால் எம் தமிழகத்தில் எம் நாட்டின் பிரதமரை கொன்றது விடுதலை புலிகள். எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. (ஒசாமா நடத்திய செப் 11 தாக்குதல் போலானது அல்லது அதற்கும் மேலானது. ஒசாமா நடத்துவது புனித போர் என்று ஒசாமா சொல்கிறார்.) விடுதலை புலிகள் பற்றி வரும் செய்திகள் வருத்தமடைய செய்கின்றன. அப்பாவி தமிழ் மக்களை மனித கேடையமாகவும், தற்கொலை படைக்கு சிறுவர்களை தயார் செய்வதாகவும், இருட்டறை கொடுமைகள், போன்ற பல செய்திகள் அவநம்பிக்கையாய் இருக்கின்றன.

நாங்கள் எங்கள் நாட்டில் நக்சலைட்டுகளையும், தீவிரவாதிகளையும் ஒடுக்க முயற்சிக்கிறோம். அதுபோல் விடுதலை புலிகளை, இலங்கை அரசு ஒடுக்க நினைப்பதை ஒடுக்க முயற்சிப்பதை நாங்கள் தவறென்று சொல்லமுடியாது. அதை தடுத்து நிறுத்தும்படி கேட்டு உங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால் இலங்கை அரசாங்கம் என் ரத்தத்தின் ரத்தமாகிய ஈழ தமிழரை கொன்று குவிக்கிறது. விடுதலை புலிகளை ஒடுக்கும் முயற்சியில். விடுதலை புலிகளை ஒடுக்கும் போர்வையில்.

இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். அண்டை நாடு என்ற முறையில் இந்தியா வருத்தங்களையும் கண்டனங்களையும் தெரிவிக்கிறது. எம் தமிழ் மக்கள், உங்கள் நாட்டு அரசாங்கத்திற்கு ராணுவ உதவிகள் செய்ய கூடாது என்று இந்திய அரசாங்கத்திற்கு சொல்லிவருகிறோம். இதையும் ஒத்து கொள்கிறேன். எம் தமிழ் அரசியல்வாதிகளும், எம் தமிழ் திரைப்பட துறையினரும், ஈழ தமிழர் பிரச்சனையை அரசியலாக்கி கொண்டு இருக்கின்றனர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக.

ஈழ பிரச்சினையில் இந்தியாவின் நிலை இதுதான். இந்தியா அரசு, அங்கிகரிக்கப்பட்ட தீவிரவாத இயக்கமான விடுதலை புலிகளை ஆதரிக்காது. இலங்கை அரசுக்கு இந்தியா அரசு ராணுவ உதவிகளை நிறுத்தினாலும், சீன மற்றும் இன்னபிற அரசுகள் ராணுவ உதவிகளை தொடர்ந்து செய்யும். எம் தமிழக அரசியல்வாதிகளோ ஈழ தமிழர்களை கொண்டு நன்கு அரசியல் ஆதாயம் தேடுவர். என்னை போன்ற சாதரண மனிதர்கள் ஈழ தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பார், வருந்துவார். இதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

உங்கள் நாட்டில் பெட்ரோல் இருந்திருந்தால் அமெரிக்கா உங்கள் நாட்டின் மீது படையெடுத்து, இலங்கையின் அரசை நிர்மூலமாக்கி இருக்கும். ஐ. நா சபை வழக்கம் போல் எதுவும் செய்யாது. அமெரிக்காவின் கைப்பாவை அது. என் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யவே நேரம் இல்லை. உலகமே பொருளாதார பின்னடைவில் சிக்கி திணறுகிறது.


என் அன்பு தமிழர்களே, ஈழ தமிழர்களே(தமிழகத்திலும், ஈழத்திலும் மற்றும் உலகெங்கிலும்),

இங்கு இந்த தமிழ் வலைபதிவுகலத்தில், பல தமிழர்கள், பல ஈழதமிழர்கள், சண்டை போட்டு தீர்க்கிறார்கள். சிலர் இந்தியாவை எள்ளி நகையாடுகிறார்கள். சிலர் அரசியல்வாதிகளை திட்டி தீர்க்கிறார்கள். சிலர் சோனியா பக்கம், சிலர் அத்வானி பக்கம், சிலர் கலைஞர் பக்கம், சிலர் ஜெ பக்கம், சிலர் வைக்கோ பக்கம், சீமான், அமீர் கைது அரசியல். சிலர் அஜித்தையும் அர்ஜுனையும் போட்டு வறுக்கிறார்கள். இவர்களால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை. எல்லாம் அரசியல் மட்டுமே. வெறும் கபட அரசியல்.

தயவு செய்து இந்த கலைஞரின் ராஜதந்திரம். ஜெ அரசியல் செய்கிறார். ராமேஸ்வரத்திற்கு அவர் வரவில்லை. மனித சங்கிலியில் இவர் கலந்துகொள்ளவில்லை. சத்தியராஜ் அழுவுகிறார். ஏகனை புறக்கணியுங்கள். இந்தமாதிரி பதிவு போடுவதற்கு பதில், ஏதாவது உருப்படியா யோசிங்க பாஸு.

எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது. எப்படி இந்த பிரச்சனை தீர்ப்பது. ஈழ தமிழர்களின் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும். ஈழ மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பது எப்போது???


வருத்தங்களுடன்
இதயமுள்ள ஒரு சாதாரண மனிதன்.

Leia Mais…

Friday, October 24, 2008

தீபாவளி வாழ்த்துக்கள்.....

எல்லோருக்கும் வணக்கமுங்க....

எல்லாருக்கும் தீபாவளி அல்லது தீப ஒளி வாழ்த்துக்கள்.....:)
பத்திரமா கொண்டாடுங்க இந்த தீபாவளிய.....

பல பேரு இப்போ சொந்த ஊருக்கு கெளம்பி இருப்பீங்க.... சந்தோஷமா கொண்டாடுங்க குடும்பத்தோடு.:))
ஊருக்கு போக முடியாதவங்க இப்ப இருக்கிற ஊரின் நண்பர்களோடு கொண்டாடுங்க.:))
சில புது படங்கள் ரிலீஸ் ஆகுது..... பார்த்துட்டு விமர்சனம் எழுதிடலாம்.....

விடுமுறை நாட்களை சந்தோஷமா கொண்டாடுங்க.....:))

Leia Mais…

ஆத்தா..... நான் பிளாகராயிட்டேன்......

எல்லோருக்கும் வணக்கமுங்கோ.!!!

நானும் பிளாகராயிட்டேன். ரொம்ப நாளா இந்த தமிழ் வலைப்பதிவு உலகத்தை சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். கடைசியா நானும் எதையாவது எழுதி தள்ளலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்து ஒரு பிளாக் ஆரம்பிச்சிருக்கேன்:) (நீயுமாடா.. அப்படின்னு நீங்க யோசிக்கறது தெரியுது..)

என்ன எழுதறதுன்னு தெரியல:( ஆனா களத்தில இறங்கினதுக்கு அப்பறம் பயந்தா முடியுமா?? என்ன சொல்றீங்க.???????

கதை (சிறுகதை, பெருங்கதை, சொந்த கதை, சோககதை, அறிவியல் புனை கதை அல்லது கூட்டு,அவியல், பொரியல் கதை) , அரசியல் (அமெரிக்கா அரசியல், மார்க்சிச அரசியல், இந்திய அரசியல், மத அரசியல், சிறுபான்மை பெரும்பான்மை அரசியல் தமிழக அரசியல், பெரியார், வலைப்பதிவு அரசியல், போலிகளின் அரசியல்), இலக்கியம் (கவிதை, கவுஜ, நுண்ணரசியல், ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், பெண்ணியம்), கட்டுரை (எதிர்த்து கட்டுரை, ஆதரித்து கட்டுரை), சினிமா (மொக்க படம் முதல் மகாமொக்கை படம் வரை)........... எவ்ளோ பாக்கிறோம் ஒரு நாளைக்கு.... எல்லாத்தையும் கலந்து கட்டி அடிக்கலாம்........:))))))))

ஆனா அவ்ளோ அறிவுக்கு நான் எங்கே போவேன்:((.... எதையாவது ஆனா எழுதனும்.....:))) confidence..... :))

கொஞ்சமாவது பின்னூட்டம் போட்டு மானத்தை காப்பாத்துங்க....:))) அப்பறம் நாள பின்ன வலைபதிவர் சந்திப்பில தலைகாட்ட முடியாது....:))

Leia Mais…